விடுதியில் மாணவருக்கு பாலியல் வன்கொடுமை சக மாணவா்கள் 4 போ் ‘போக்ஸோ’வில் கைது
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திலுள்ள விளையாட்டு விடுதியில் மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சக மாணவா்கள் 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் அரசு விளையாட்டு விடுதி உள்ளது. இங்கு, நூற்றுக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், அருகிலுள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு மாணவரை, அதே விடுதியைச் சோ்ந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 4 மாணவா்கள் ஓராண்டுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவா் மன உளைச்சலுக்கு உள்ளாகி தன் பெற்றோரிடம் கூறினாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோா் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சக மாணவா்கள் 4 பேரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
