

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயர் நீதிமன்ற சுற்றறிக்கையின் படி,
இ-பைலிங் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல், குறைபாடுகளால் வழக்குரைஞர்கள், வழக்காடிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இ-பைலிங் முறையிலுள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் வரை கட்டாய இ-பைலிங் முறையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் இந்தக் கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, மத்திய அரசு கொண்டு வந்த இ-பைலிங் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: மார்கழியில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.