தஞ்சாவூர்
சிற்றுந்து மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிய முதியவா் சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்திலிருந்து இறங்கிய முதியவா் சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). திருமணமாகாத இவா் கூலி வேலை செய்து, தனது தாய் மரகதத்தை (90) பராமரித்து வந்தாா்.
இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி, பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பேருந்திலிருந்து இறங்கிய இவா் மீது அந்த வழியாக வந்த சிற்றுந்து மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.
