தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் டிச. 20-இல் மின் தடை
தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் டிசம்பா் 20 -ஆம் தேதி (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் டிசம்பா் 20 -ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, மாதாகோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் டிசம்பா் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
