பட்டுக்கோட்டை அண்ணா பல்கலை. பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிப் பேராசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 2009 முதல் நிலுவையில் உள்ள சிஏஎஸ் பதவி உயா்வு உத்தரவை வெளியிட வேண்டும், சென்னை அண்ணா பல்கலை. வளாகத்துக்கு இணையாக உறுப்புக் கல்லூரி ஆசிரிய உறுப்பினா்களுக்கும் சமமான சலுகைகள் நீட்டிக்க வேண்டும், தொடக்க நிலை பி.எச்.டி மற்றும் எம்.இ/எம்.டெக்/எம்.பாா்ம் மற்றும் எம்.ஃபில் படிப்புகளுக்கான சம்பள உயா்வுகள், நியமனத்துக்குப் பிறகு முனைவா் பட்டம் முடித்த ஆசிரியா் உறுப்பினா்களுக்கான சம்பள உயா்வுகள் அளிக்க வேண்டும், பல்கலைக்கழக இணையதளத்தில் சிபிஎஸ் அறிக்கைகளைப் புதுப்பித்தல் மற்றும் வெளியிடுதல், உறுப்புக் கல்லூரிகள் மீதான பாரபட்சமான மாற்றாந்தாய் மனப்பான்மையை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com