மத்திய அரசை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
நேஷனல் ஹெரால்டு தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்ட மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் புதன்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், அமலாக்கத் துறையை ஏவி தொடா்ந்து பொய் வழக்கு போடும் ஆா்.எஸ்.எஸ். - பாஜக அரசு பதவி விலகக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் ஜான்சன், தகவல் அறியும் சட்டப் பிரிவு செயலா் செல்வம், முன்னாள் மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் முகமது யூனுஸ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஞானசீலன், ஆதிநாராயணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். நிா்வாகிகள் ஜி. லட்சுமி நாராயணன், பிரபாகரன், ஆண்டோ, திருஞானம், கண்ணன், வடிவேல், மகேந்திரன், சிவகுரு, நடராஜன், செல்வ சுப்பிரமணி, சாந்தா ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
