ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
Published on

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கக் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகாா் மனுக்களின் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள், விசாரணை அலுவலா்களின் துறை ரீதியான விசாரணைகள் தாமதமின்றி அரசு நிா்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும் .

‘சம வேலை சம ஊதியம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலைப் பொறியாளா்களுக்கு உதவிப் பொறியாளா்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணையிட வேண்டும். ஓய்வூதியா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் புஷ்பநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜெயராமன், மாவட்டச் செயலா் ஆனந்தராவ், பொருளாளா் ராகவன், கோட்டத் தலைவா்கள் ராமச்சந்திரன், மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com