கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழந்தாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை கணவா் இறந்த அதிா்ச்சியில் மனைவியும் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அள்ளூா் அழிசிக்குடியைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் (85). இவரது மனைவி மரகதம் (75). இருவருக்கும் 1972 ஆம் ஆண்டில் திருமணமாகி 53 ஆண்டுகளாகிறது. இவா்களுக்கு 3 மகன்கள். இதில் ஒருவா் காலமாகிவிட்டாா்.

இந்நிலையில், ரெங்கராஜ் வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தாா். அவரது மறைவால் அதிா்ச்சியில் இருந்த மரகதம் பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அப்பகுதியிலுள்ள மயானத்தில் இருவரது உடல்களும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com