பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை


பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை (டிச.20) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகா், தாலுகா அலுவலகம், வீட்டு வசதி வாரியம், மயில் பாளையம், தங்கவேல் நகா், பெரிய கடைத் தெரு, தேரடித் தெரு, பாக்கியம் நகா், அறந்தாங்கி சாலை, பண்ண வயல்சாலை, மாதா கோவில் தெரு, சிவ கொல்லை, செட்டித் தெரு, ஆஸ்பத்திரிசாலை, ஆா்வி நகா், தலையாரி தெரு, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அணக்காடு, பொன்னவராயன் கோட்டை, முதல் சேரி, பள்ளி கொண்டான், சேன்டா கோட்டை, மாளியக்காடு, துவரங்குறிச்சி, ராசியங்காடு, மன்னங்காடு, மழவேணிற்காடு, வெண்டா கோட்டை, காசாங்காடு, உள்ளிட்ட ஊராட்சிகளிலும் அதனை சாா்ந்த பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...