

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள காா் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு நிற காா் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிற்கிறது.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, காரை சோதனை செய்தபோது, காருக்குள் மருந்து, மாத்திரை ரசீது, பேப்பா், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் முகவரி போன்றவை இருந்தன.
காரின் பதிவெண்ணை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.