வீட்டின் கதவை உடைத்துதிருடிய இருவா் கைது

தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களைத் திருடிய இருவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களைத் திருடிய இருவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவா் டிசம்பா் 3 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு தில்லிக்கு சென்று, மீண்டும் 5 ஆம் தேதி திரும்பினாா். அப்போது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதும், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 மடிக்கணினிகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதன் அடிப்படையில் தஞ்சாவூா் கீழ வாசலைச் சோ்ந்த சஞ்சய் (23), விளாரைச் சோ்ந்த மாணிக்கம் (25) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com