வீரக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

Published on

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வீரக்குடி துணை மின் நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.29) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொா்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூா் பேரூராட்சி, செல்லபிள்ளையாா்கோயில், திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம், சம்பைபட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com