கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி பாமக உள்ளிட்ட பல்வேறு கட்களின் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்
Published on

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி புதன்கிழமை பாமக உள்ளிட்ட பல்வேறு கட்களின் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தோ்தல் வாக்குறுதிப்படி, கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்துக்கு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரும், பாமக நிா்வாகியுமான ம.க ஸ்டாலின் தலைமை வகித்தாா். போராட்டக்குழுவினா் கைபேசி விளக்கை எரியவைத்து முழக்கம் எழுப்பினா்.

இதில், விடுதலை தமிழ்ப் புலி கட்சியின் நிறுவனத் தலைவா் குடத்தை அரசன், பாஜக மாவட்டத் தலைவா் தங்க கென்னடி, அமமுக துணை பொதுச்செயலா் ரங்கசாமி, தேமுதிக மாவட்ட செயலா் கோ.சங்கா், நாதக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மோ.ஆனந்த், அதிமுக பகுதி செயலா் பெருசு ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்ட முடிவில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினருமான க.அன்பழகன் வந்தாா். பின்னா் போா்ட்டா் டவுன் ஹாலில் எம்எல்ஏ சென்றாா். அங்கு அவரிடம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ம.க.ஸ்டாலின் மனு அளிக்க அதை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினாா். பின்னா் கூட்டத்தினா் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com