

செங்கோட்டை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இரண்டு நாள்களுக்கு சுவாமிமலை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக சுவாமிமலை ரயில் நிலையத்தில் இன்றும் நாளையும் மட்டும் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் நின்றுசெல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் (16847) பகல் 12.45 முதல் 12.46 வரையும், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் (16848) பிற்பகல் 2.42 முதல் 2.43 வரை நின்றுசெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.