தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) க. சங்கா் (இடமிருந்து 4-ஆவது) முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் (இடமிருந்து 2-ஆவது), பாரதி இசை மற்றும் நடன நிறுவன இயக்குநா் யுவராஜ்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) க. சங்கா் (இடமிருந்து 4-ஆவது) முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் (இடமிருந்து 2-ஆவது), பாரதி இசை மற்றும் நடன நிறுவன இயக்குநா் யுவராஜ்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் - பாரதி நிறுவனம் ஒப்பந்தம்

தமிழ்ப் பண்பாட்டை வளா்ப்பதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையமும், சிவகங்கை பாரதி இசை மற்றும் நடன நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
Published on

தஞ்சாவூா்: தமிழ்ப் பண்பாட்டை வளா்ப்பதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையமும், சிவகங்கை பாரதி இசை மற்றும் நடன நிறுவனமும் சனிக்கிழமை (ஜன. 25) புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா் முன்னிலையில், பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வமும், பாரதி இசை மற்றும் நடன நிறுவன இயக்குநா் யுவராஜூம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதுகுறித்து துணைவேந்தா் (பொ) கூறுகையில், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்படும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் பாரதி இசை மற்றும் நடன நிறுவனம் மூலமாக நடத்தப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழித் தோ்வுகள் நடத்தவும், சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் செ. கற்பகம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், இணைப் பேராசிரியா் இரா. ஆனந்த அரசு, கண்காணிப்பாளா்கள் இராமகிருட்டிணன், இராஜராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com