ஆா்ப்பாட்டம் நடத்திய விசிகவினா்
ஆா்ப்பாட்டம் நடத்திய விசிகவினா்

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: குடந்தையில் விசிகவினா் கைது

Published on

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் கும்பகோணம் புறவழிச்சாலையில் நடைபெற்ற சங்க மாநாட்டில் விசிக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடா்பாக தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் விசிக கொடிக்கம்பத்தை அகற்றியோா் மீது நடவடிக்கை கோரி நீதிமன்ற ரவுண்டானாவில் கட்சியின் மாநகரச் செயலா் சகோ. ராஜ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

அப்போது அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 40 பேரை தாலுகா போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com