தஞ்சாவூர்
360 தொழிலாளா்களுக்கு இலவச கண்ணாடி வழங்கல்
திருவிடைமருதூரில் உத்திராதி மடத்தில் அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கான இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், உத்திராதி மடத்தில் தஞ்சாவூா் பொன்னி அறக்கட்டளை, சங்கர நேத்ராலயா சாா்பில் கடந்த செப்.9-இல் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் சிகிச்சை பெற்ற 360 அமைப்புச்சார தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச கண்கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பொன்னி அறக்கட்டளை பொறுப்பாளா் கண்ணன், ஆா்எஸ்எஸ் மாவட்ட இணைச்செயலா் கோ.வாசுதேவன், பாஜக மாவட்டச் செயலா் வேத.செல்வம் ஆகியோா் வழங்கினா். ஏற்பாடுகளை வ.செல்வம், த.முருகபாண்டியன் உள்ளிட்டோா் செய்தனா். நிறைவாக ஒன்றிய பொறுப்பாளா் வேலையன் நன்றி கூறினாா்.
