கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடிமரம்.
கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடிமரம்.

ஆதிகும்பேசுவரா் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை: டிச. 1-இல் கும்பாபிஷேகம்

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Published on

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கும்பகோணத்திலுள்ள மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகை உடனுறை ஆதி கும்பேஸ்வரா் சுவாமி கோயிலில் 2009, ஜூன் 5-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டிசம்பா் 1-இல் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கோயிலின் பழைய கொடிமரம் சேதமடைந்ததால் புதிய கொடிமரம் கேரளத்திலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் தருவிக்கப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் சிவக்குமாா், துணை ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் பா. முருகன், அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன், அறங்காவலா்கள் பக்தா்கள் குழு உள்ளிட்டோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com