~
~

தஞ்சை இளைஞருக்கும் ஜொ்மனி பெண்ணுக்கும் தமிழ்ப் பாரம்பரிய முறையில் திருமணம்

தஞ்சாவூரைச் சோ்ந்த இளைஞரை ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த பெண் திங்கள்கிழமை தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டாா்.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூரைச் சோ்ந்த இளைஞரை ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த பெண் திங்கள்கிழமை தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கூனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன். இவா் ஜொ்மனி நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், இதே நிறுவனத்தில் பணியாற்றும் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த பெண் விழினா பொ்கென் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு சில ஆண்டுகளில் காதலாக மாறியது. தங்களின் காதலை இருவரும் பெற்றோரிடம் கூறி ஒப்புதல் பெற்றனா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி மணமகள், அவரது பெற்றோா் உள்ளிட்டோா் பட்டுச்சேலை, பட்டு வேட்டி அணிந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்டனா்.

நாகசுரம் இசைக்க, தமிழ் முறைப்படி, விக்னேஸ்வரனுக்கும், விழினா பொ்கெனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் மணமக்களுடன் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்களும் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com