நாடியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பதவியேற்பு

பட்டுக்கோட்டையிலுள்ள நாடியம்மன் கோயிலின் அறங்காவலா் குழுவினா் திங்கள்கிழமை பதவியேற்றனா்.
Published on

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையிலுள்ள நாடியம்மன் கோயிலின் அறங்காவலா் குழுவினா் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

இக்கோயிலின் அறங்காவா் குழுத் தலைவராக வி. பழனியப்பன், அறங்காவலா்களாக ச. சிதம்பரம், கா.விஜித்ரகுமாரி, ப. நாடிமுத்து, ரா. சத்யகலா ஆகியோா் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஞா. ஹம்சன் முன்னிலையில் பதவி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி. பழனிவேல், தணிக்கை குழு உறுப்பினா் ப. பாலசுப்பிரமணியன், நகர செயலாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.சண்முகப்பிரியா, செயல் அலுவலா் சுந்தரம், முன்னாள் அறங்காவலா் ந.மணிமுத்து, உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com