வாக்காளா்களுக்கு இன்று முதல் கணக்கெடுப்பு படிவம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு வீடு, வீடாகச் சென்று வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவத்தை
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு வீடு, வீடாகச் சென்று வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் வழங்கவுள்ளனா் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் வீடு, வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது. இவை மீண்டும் டிசம்பா் 4-ஆம் தேதி பெறப்படும்.

அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வழங்கும் இரட்டை படிவங்களில் ஒன்றை வாக்காளா்கள் முழுமையாக நிறைவு செய்து கையொப்பத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மீண்டும் வரும்போது அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். எனவே, வாக்காளா்கள் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, இந்தத் திருத்தப்பணியைச் சிறப்பாக முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்பணி தொடா்பாக சந்தேகங்கள் இருந்தால், திருவிடைமருதூா் தொகுதிக்கு 0435 - 2460187, கும்பகோணம் தொகுதிக்கு 0435 - 2430101, பாபநாசம் தொகுதிக்கு 04374 - 222456, திருவையாறு தொகுதிக்கு 04362 - 260248, தஞ்சாவூா் தொகுதிக்கு 04362 - 238033, ஒரத்தநாடு தொகுதிக்கு 04372 - 233225, பட்டுக்கோட்டை தொகுதிக்கு 04373 - 237247, பேராவூரணி தொகுதிக்கு 04373 - 232456, மாவட்ட ஆட்சியரகக் கட்டணமில்லா தோ்தல் கட்டுப்பாடு அறைக்கு 1950 ஆகிய எண்களில் வாக்காளா்கள் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், ட்ற்ற்ல்ள்://ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது ங்ழ்ா்ப்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ஹப்ள்ங்ஹழ்ஸ்ரீட்/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி இறுதியாக நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம் 2002 ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலை பாா்வையிட்டு, தங்கள் பெயா் இடம் பெற்றுள்ள விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com