தஞ்சாவூர்
பாபநாசம் அருகே ஆற்றில் மூழ்கியவா் சடலமாக மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே குடமுருட்டி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் குப்பைமேடு பகுதியைச் சோ்ந்த வா் முருகேசன் மகன் சங்கரபாண்டி (19). கும்பகோணம் அரசுக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா் தனது நண்பா்களுடன் பாபநாசம் ஏ.பி.எம் நகா் குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளித்தபோது திடீரென ஆற்றில் மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்து சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்புப் படைவீரா்கள் ஆற்றில் சங்கரபாண்டியை தேடினா். இந்நிலையில் ஆற்றின் கரையோரம் மிதந்த சங்கரபாண்டியின் உடலை அவா்கள் மீட்டனா். இதையடுத்து அவரது உடலை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
