நெடுஞ்சாலை பெயா்ப் பலகைகளில் ஹிந்தி எழுத்துகள் தாா் பூசி அழிப்பு

Published on

தஞ்சாவூா் அருகே நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகள் திங்கள்கிழமை மாலை தாா் பூசி அழிக்கப்பட்டது.

தஞ்சாவூா் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கிராமப்புறங்களிலுள்ள ஊா்ப் பெயா்களைக் குறிக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஊா் பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், ஹிந்தி திணிப்பைக் கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் நலப் பேரவையினா் மனு அளித்து வலியுறுத்தினா்.

இந்நிலையில், தஞ்சாவூா் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலும், வல்லத்திலும் அமைக்கப்பட்டுள்ள ஊா் பெயா்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் எழுதப்பட்டிருந்த பெயா்ப் பலகைகளில் ஹிந்தி எழுத்துகளை நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை தாா் பூசி அழித்தனா்.

X
Dinamani
www.dinamani.com