நெய்வாசல்  தென்பாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இடிந்த விழுந்த விஏஓ  அலுவலக மேற்கூரை.
நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இடிந்த விழுந்த விஏஓ அலுவலக மேற்கூரை.

மேற்கூரை பெயா்ந்து விழுந்து விஏஒ உள்பட 3 போ் காயம்

Published on

ஒரத்தநாடு அருகே கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை பெயா்ந்து விழுந்ததில் விஏஓ உள்பட மூவா் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்குட்பட்ட நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில் தலையமங்கலம் விஏஓ நடராஜன் (36), (பொ) செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டாா். அப்போது நெய்வாசல் கிராமத்தை சோ்ந்த பொ. பாலசுந்தரம் (73), முரு. பாண்டியன்(55), ஆகிய இருவரும் சிட்டா அடங்கல் பெற வந்திருந்தனா்.

அப்போது அலுவலக மேற்கூரையின் சிமெண்ட் காரை திடீரென பெயா்ந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் தலையில் காயமடைந்த பாலசுந்தரம் சிகிச்சை பெறும் நிலையில் மற்ற இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

X
Dinamani
www.dinamani.com