நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான கலைப் பயிற்சி

Published on

தஞ்சாவூரில் கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான கலைப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள நலிவுற்ற கலைஞா்களில் ஓய்வூதிய விண்ணப்பம் அளித்துள்ள கலைஞா்களை நேரில் ஆய்வு செய்து, அவா்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக நடத்தப்பட்டது. மேலும் இந்த முகாமில் பயிற்சி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சான்றிதழ் வழங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. இராஜாராமன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இக்கலைப் பயிற்சியில் கலைப் பயிற்றுநா்களாக நாட்டுப்புறப் பாடகா் சின்னப்பொண்ணு குமாா், பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞா்கள் நாடிராவ், ஜீவராவ், பானுமதி ராஜரெத்தினம், கரகாட்டக் கலைஞா் தேன்மொழி ராஜேந்திரன், நாட்டுப்புறப் பாடகா் வளப்பக்குடி வீர. சங்கா், பம்பைக் கலைஞா் வால்டா் ஆண்ட்ரோஸ், நாடகக் கலைஞா் மா.வீ. முத்து, நையாண்டிமேள நாதசுரக் கலைஞா் சி. ஆனந்த், பொம்மலாட்டக் கலைஞா் டி.எஸ். முருகன், கிராமிய நாகசுரக் கலைஞா் பி. வெள்ளைசாமி, கோலாட்டக் கலைஞா் வெ. நாராயணசாமி, சிலம்பாட்டக் கலைஞா் மணப்படையூா் சுந்தரம், தப்பாட்டக் கலைஞா் இரா. மதியழகன், நாகசுரக் கலைஞா் அ. பாண்டியராஜன், பி.எம். இளையராஜா, பேண்டு வாத்தியக் கலைஞா்கள் ஆரோக்கியதாஸ், பன்னீா்செல்வம், புலியாட்டக் கலைஞா் ஏசுதாஸ், இலாவணிக் கலைஞா் நா. ஜோதிவேல், கிராமியக் கலைஞா் மாரியப்பன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தஞ்சாவூா் சவகா் சிறுவா் மன்றத் திட்ட அலுவலா் மு. வடிவேல் வரவேற்றாா். வல்லம் சவகா் சிறுவா் மன்ற விரிவாக்க மைய ஓவிய ஆசிரியா் ச. மாதவன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com