பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரேமாவிடம் மருத்துவ உபகரணங்களை செவ்வாய்க்கிழமை வழங்கிய தனியாா் வங்கி நிா்வாகத்தினா்.
தஞ்சாவூர்
பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உபகரணங்கள்
பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் தனியாா் வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பயனாளா் பயன்பாட்டுக்காக ரூ.10 லட்சம் மதிப்பில் வங்கியின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் 100 இருக்கைகள், குழந்தைகள் எடை பாா்க்கும் இயந்திரம், ரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவி, பல் சிகிச்சை பெற நோயாளா் இருக்கை, 20 கட்டில்கள், ஸ்டெச்சா், எக்ஸ்ரே இயந்திரம் என ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை மருத்துவா் பிரேமாவிடம் தனியாா் வங்கி மருத்துவ அலுவலா் வழங்கினாா்.

