ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

Published on

திருவிடைமருதூா் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாதவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாதையில் சன்னாபுரம் அருகே தண்டவாளப் பாதையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் கிராம நிா்வாக அலுவலா் முருகானந்தம் கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் மனோன்மணி, நிகழ்விடத்துக்குச் போலீஸாருடன் சென்று சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com