திருக்கோடிக்காவலில் மகா பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Published on

ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள மகா வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி கோயில் வளாகத்தில் புகழ்பெற்ற மகா வடுக பைரவா் கோயில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு முன்னிட்டு மகா வடுக பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மகா வடுக பைரவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராமவாசிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com