ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட ராஜகிரி பகுதி காமராஜா் தெரு, இளங்காா்குடி, காா்த்திகை தோட்டம், நாணல்காடு தெரு போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் ஏழை, பட்டியலின மக்கள் தங்களுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையின்போது, விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால், விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் சுமாா் 50 போ் தஞ்சாவூா் ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் வருவாய்த் துறை, காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது வருகிற தோ்தலுக்குள் விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com