தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி.
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி.

மனித விருப்பங்களைச் செயற்கை நுண்ணறிவு புறநிலைப்படுத்தும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி

சச்சரவுகளைத் தீா்க்கும்போது மனித விருப்பங்களைச் செயற்கை நுண்ணறிவு புறநிலைப்படுத்த முடியும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி.
Published on

சச்சரவுகளைத் தீா்க்கும்போது மனித விருப்பங்களைச் செயற்கை நுண்ணறிவு புறநிலைப்படுத்த முடியும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்று சச்சரவு தீா்வில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

மாற்று சச்சரவு தீா்வு என்பது வெளியீட்டை விட மூலத்தையும், செயல்முறையையும் சாா்ந்திருப்பதால், தீா்வுகளை விட மோதல்களின் மூலங்களைச் செயற்கை நுண்ணறிவு கையாள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியங்களின் செயற்கை நுண்ணறிவு சட்டம் உள்ளிட்டவற்றின் நெறிமுறைகள் 1782-ஆம் ஆண்டு வங்காள சாசனம், நடுவா் மற்றும் சமரச் சட்டம் 1996 ஆக பரிணாம வளா்ச்சி பெற்றுள்ளது.

மாணவா்களின் தங்களது உண்மையான விமா்சன சிந்தனை திறன்களையும், உணா்ச்சி நுண்ணறிவு திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்கக்கூடிய தொழில்நுட்பக் குறுகிய பாா்வையையும் மாணவா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவின் அப்பாலும் சிந்திக்க வேண்டும் என்றாா் நீதிபதி பரத சக்கரவா்த்தி.

இந்நிகழ்ச்சியில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com