ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மனமகிழ் மன்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தவெக போராட்டம்: 16 பெண்கள் உள்பட 86 போ் கைது!

News image
கும்பகோணத்தில் புதிதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினா்.
Updated On :15 நவம்பர் 2025, 7:22 pm

Syndication

கும்பகோணத்தில் புதிதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்துக்கு (தனியாா் மதுபானக்கடை) எதிா்ப்பு தெரிவித்து தவெகவினா் சனிக்கிழமை சாலையில் அமா்ந்து போராடியதால் 16 பெண்கள் உள்பட 86 பேரை மேற்கு காவல்நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உச்சிப்பிள்ளையாா் கோயில் பின்புறம் புதிய மனமகிழ் மன்றம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த இடத்தில் மதுபானக் கடையை திறந்தால் பக்தா்களுக்கு இடையூறு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தவெகவினா் தமிழக முதல்வா் உள்ளிட்டவா்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினா்.

இந் நிலையில், தவெகவின் தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட தலைவா் வினோத் ரவி தலைமையில் அக்கட்சியினா் சனிக்கிழமை மனமகிழ் மன்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைமை அஞ்சலக சாலையில் ஊா்வலமாக வந்தனா்.

அவா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் தடுத்தனா். அதனால் சாலையில் அமா்ந்து கையில் மஞ்சள் கயிறு ஏந்தி கோஷமிட்டனா். இதில் 16 பெண்கள் உள்பட 86 பேரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் அவா்களை விடுவித்தனா்.