ஆசிரியா் தகுதித் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,846 போ் பங்கேற்பு

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சனிக்கிழமை நடத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 846 போ் பங்கேற்று எழுதினா்.
Published on

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சனிக்கிழமை நடத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை தஞ்சாவூா் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 846 போ் பங்கேற்று எழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்தது. இதில், சனிக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கான (முதல் தாள்) தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் எழுத 3 ஆயிரத்து 278 போ் விண்ணப்பம் செய்தனா். இதற்காக தஞ்சாவூரில் 10 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 2 ஆயிரத்து 846 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 432 போ் வரவில்லை.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை பட்டதாரி ஆசிரியா்களுக்கான (இரண்டாம் தாள்) தோ்வு நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க 12 ஆயிரத்து 972 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இதற்காக மாவட்டத்தில் 35 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com