தஞ்சாவூர்
கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே காவல் உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கிய டேவிட் தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ரெனால்டை (26) கைது செய்தனா்.
