தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆா்.) கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்தும், அதில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை கழக நிா்வாகக்குழு உறுப்பினரும், தஞ்சாவூா் மத்திய மாவட்டச் செயலருமான இரா. விஜய் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஏனாதி மதன் (தெற்கு), நிஜாம் (வடக்கு), ரமேஷ் (மேற்கு), வினோத் ரவி (கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பைரவி உறுதிமொழி வாசித்தாா். இதில், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வடக்கு மாநகரச் செயலா் சாய் ஆனந்த் வரவேற்றாா். நிறைவாக, தெற்கு மாநகரச் செயலா் வசந்த் நன்றி கூறினாா்.

