வடலூா் சத்திய ஞான சபையின் எட்டுக் கதவுகளைத் திறந்து ஜோதியை காட்ட வலியுறுத்தல்

Published on

வடலூா் சத்திய ஞான சபையின் எட்டுக் கதவுகளைத் திறந்து ஜோதியை காட்ட வேண்டும் என வள்ளலாா் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள சத்திய ஞான சபையில் வள்ளலாா் பணியகத்தின் அறவோா் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வடலூா் சத்திய ஞான சபையின் எட்டுக் கதவுகளைத் திறந்து ஜோதியை காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு பணியகத்தின் தலைவா் மு. சுந்தரராசன் தலைமை வகித்தாா். குடந்தை சாதுக்குமாா், சென்னை மாவட்டப் பொறுப்பாளா் ராஜா முன்னிலை வகித்தனா். பணியகத்தின் துணைத் தலைவா் க. முருகன் நோக்கவுரையாற்றினாா்.

பொதுச் செயலா் வே. சுப்பிரமணிய சிவா, பேராசிரியா் நடராஜன், ரமேஷ், ராஜேந்திர பிரசாத், மெய்யறிவாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com