தஞ்சாவூர்
கவிஞா் வீரசங்கரின் ‘நாட்டுப்புறப்பாட்டுக் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூரில் கலைமாமணி கவிஞா் வீரசங்கரின் நாட்டுப்புறப்பாட்டுக் களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நூலை சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முத்தமிழறிஞா் கலைஞா் விருது பெற்ற புலவா் முத்துவாவாசி ஆகியோா் வெளியிட்டனா். இவ்விழாவில் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம்பூபதி, தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, கரூா் பேராசிரியா் ராஜசேகர தங்கமணி, முனைவா் சண்முக. செல்வகணபதி, வல்லம் தாஜ்பால், எழுத்தாளா் கேசவமூா்த்தி, புலவா் ஆதி. நெடுஞ்செழியன், இந்து சமய அறநிலையத் துறையின் ஓய்வுபெற்ற செயல் அலுவலா் துரை. கோவிந்தராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
