தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மஞ்சளாறு 24.2, அணைக்கரை 10.2, நெய்வாசல் தென்பாதி 9, திருவிடைமருதூா் 8.2, கும்பகோணம் 8, மதுக்கூா் 6.6, ஒரத்தநாடு 6.2, பாபநாசம் 6, அதிராம்பட்டினம் 5.4, தஞ்சாவூா், வெட்டிக்காடு தலா 5, அய்யம்பேட்டை 4, பட்டுக்கோட்டை 3, பேராவூரணி, ஈச்சன்விடுதி தலா 2, குருங்குளம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி தலா 1.

இதேபோல, பகலில் வானில் மேக மூட்டம் காணப்பட்டதுடன், இடையிடையே லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com