தனியாா் பள்ளி ஆசிரியா்கள் முற்றுகை போராட்டம்

தனியாா் ஆங்கிலப்பள்ளிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதைக் கண்டித்து ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
Published on

தனியாா் ஆங்கிலப்பள்ளிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதைக் கண்டித்து ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளா்கள் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் லால் பகதூா் சாஸ்திரி சாலையில் தனியாா் ஆங்கிலப்பள்ளியை கண்டித்து கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதைக் கண்டித்து அப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாா் மனு கொடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com