தஞ்சாவூர்
22 சதவீதம் ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
அம்மாபேட்டையில், வெள்ளிக்கிழமை 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டையில், வெள்ளிக்கிழமை 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகா் என்.இளஞ்செழியன், அம்மாபேட்டை வேளாண் அலுவலா் வி.பிரியா, துணை வேளாண் அலுவலா் மனோகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் பங்கேற்ற விவசாயிகள், 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் நிராகரித்ததை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.