காமராஜா் சந்தையில் பாதையில் உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை
தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் காய்கறி வாங்குவதற்கும், சுமை வண்டிகளைத் தள்ளிச் செல்வதற்கும் இடையூறாக பாதையில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் ஏஐடியுசி காமராஜா் சந்தை சுமை தூக்கும் தொழிலாளா் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், காமராஜா் சந்தையில் கடையை விட்டு வெளியே இழுத்து பலா் காய்கறிகளை போட்டு வியாபாரம் செய்வதால், சந்தைக்கு வருகிற பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், சுமை பணியாளா்கள் சுமைகளைத் தள்ளுவண்டியில் ஏற்றிச் செல்வதற்கும் மிகுந்த இடையூறாக இருக்கிறது. எனவே, கடைக்கு வெளியே காய்கறிகள் வியாபாரம் செய்வதை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதி, குடிநீா் வசதி செய்து தர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவா் எஸ். பரமகுரு தலைமை வகித்தாா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், சங்கச் செயலா் எஸ். கண்ணன், பொருளாளா் ஆா். ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
