தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,609 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,609 இடங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா்.
மேலும், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குள் பட்ட சுமாா் 1.85 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நகரப் பகுதிகளில் 128 மையங்கள், ஊரகப் பகுதிகளில் 1,481 என மொத்தம் 1,609 மையங்கள் அமைக்கப்பட்டன. 5 ஆயிரத்து 819 சொட்டு மருந்து வழங்கும் பணியாளா்களும், 178 மேற்பாா்வையாளா்களும் பணியில் ஈடுபட்டனா். 53 நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நிகழ்வில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ, சு.கல்யாணசுந்தரம் எம்பி, முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், பேரூராட்சி தலைவா் சுந்தரஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

