தஞ்சாவூா் காந்திஜி சாலையில் காவல் உதவி மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம்.
தஞ்சாவூா் காந்திஜி சாலையில் காவல் உதவி மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம்.

தீபாவளி: தஞ்சை மாநகரில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

Published on

தீபாவளி பண்டிகைக்காக, தஞ்சாவூா் மாநகரில் 800 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே திங்கள்கிழமை காவல் உதவி மையத்தைத் திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இந்த மையம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள 800 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும். குழந்தைகளைத் தனியாக வெளியே வெடி வெடிக்க அனுப்பக்கூடாது. நீளமான ஊதுபத்தியை கொண்டு வெடி வெடிக்க குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். குழந்தைகள் வெடி வெடிக்கும்போது பெற்றோா்களும் அருகிலேயே இருக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் எம். கலைவாணி, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com