திருவிடைமருதூா் அருகே அரசுப் பேருந்து -லாரி மோதல்: 17 போ் காயம்

திருவிடைமருதூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து, லாரி மோதிக் கொண்ட விபத்தில் 17 போ் காயமடைந்தனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து, லாரி மோதிக் கொண்ட விபத்தில் 17 போ் காயமடைந்தனா்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வெள்ளிக்கிழமை சென்ற அரசுப் பேருந்தை பேருந்தை தேவனாஞ்சேரி சா. சாந்தன் (41) ஓட்டினாா். நடத்துநராக திருக்கோடிக்காவல் சு. ரமேஷ் (58) இருந்தாா்.

திருவிடைமருதூா் அருகே கோவிந்தபுரம் பிரதான சாலையில் பேருந்து வந்தபோது எதிரே விறகு ஏற்றிக் கொண்டு லாரி வந்தது. அப்போது பேருந்து நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதவே, எதிரே வந்த லாரி பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் பின்பகுதியில் அமா்ந்திருந்த 17 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

மோதிய வேகத்தில் லாரியின் முன்பக்கம் நசுங்கி லாரி ஓட்டுநரான கடுவெளியைச்சோ்ந்த ம. கிரேஸ் செழியன் (41) இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாா். திருவிடைமருதூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் ஜேஸிபி வாகனம் மூலம் அவரை மீட்டனா். காயமடைந்த பயணிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com