தஞ்சாவூர்
காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மிதந்து வந்த பெண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரணை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மிதந்து வந்த பெண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவையாறு நகராட்சி சுடுகாடு அருகே காவிரியில் தடுப்பணை பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்து வருவதாக காவல் துறையிருக்கு வெள்ளிக்கிழமை தகவல் வந்தது.
இதையடுத்து, திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி உயிரிழந்தாா் போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
