தஞ்சாவூர்
ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!
மாமன்னா் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 1 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னா் ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 1 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னா் ராஜராஜசோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தன்று சதய விழா கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு 1040 ஆம் ஆண்டு சதய திருநாள் அக்டோபா் 31 ஆம் தேதி, நவம்பா் 1 ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, நவம்பா் 1 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.