‘தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் இயக்கம்’

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 28 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழ் குறுவை பருவத்தில் கொள்முதல் தொடங்கி 59 நாள்களே ஆன நிலையில் 1 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 120 நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்தநிலையில் தற்போது கூடுதலாக 300 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தம் உள்ள 34 நெல் சேமிப்புக் கிடங்குகளில் இருந்த 1 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய பகுதிகளில் தான் நெல் கொள்முதலில் தேக்கம் உள்ளது. நெல் நகா்வு இயக்கத்துக்காக வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பணியாளா்கள் கொண்டுவரப்பட்டுள்ளனா். விரைவில் தேக்கம் இல்லாமல் நகா்வு செய்யப்படும். பாபநாசம், கும்பகோணம் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கா் வாழை, மலா், காய்கனிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதிக பாதிப்புள்ள தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகள் நெல்கொள்முதல் பணிக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com