தஞ்சாவூர்
அரசுக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
 கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளம் கலை அறிவியல் தாவரவியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினா். விழாவுக்கு, முதல்வா் மா. கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் பேராசிரியா் இரா. முருகன் முன்னிலை வகித்தாா். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை அதிகளவில் நடப்போவதாக மாணவ மாணவியா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
