தஞ்சாவூா் விதைப் பரிசோதனை 
நிலையத்துக்கு தேசிய தரச்சான்று அங்கீகாரம்

தஞ்சாவூா் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு தேசிய தரச்சான்று அங்கீகாரம்

தஞ்சாவூா் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு தேசிய தரச்சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Published on

தஞ்சாவூா் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு தேசிய தரச்சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) தரச் சான்றை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் காண்பித்து விதைப் பரிசோதனை நிலைய அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, மாவட்ட விதை ஆய்வுத் துணை இயக்குநா் வி. சுஜாதா, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உதவி இயக்குநா் து. கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், விதை ஆய்வுத் துணை இயக்குநா் சுஜாதா தெரிவித்தது:

தஞ்சாவூா் விதைப்பரிசோதனை நிலையத்தில் நிகழாண்டில் இதுவரை பெறப்பட்ட 2 ஆயிரத்து 666 விதை மாதிரிகள் விதைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யபட்டதில், 167 விதை மாதிரிகள் தரமற்றவை என உறுதி செய்யப்பட்டது.

சா்வதேச தர விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு இணையாக செயல்படும் இந்த விதைப் பரிசோதனை நிலையத்துக்கு தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) தரச்சான்று மாநிலத்தில் முதலாவதாக அண்மையில் பெறப்பட்டது. இதனால் இப்பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்து முடிவுகள் வெளியிடப்படும் விதைகளுக்கு உலகளவில் விற்பனை பிரதிநிதித்துவம் கிடைப்பதுடன், தேசிய அளவிலும், உலகளவிலும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. மேலும் விதைப் பரிசோதனை செய்து கொள்ளும் வாடிக்கையாளா்களுக்கு நம்பகத்தன்மையும், திருப்தியும் கிடைக்கிறது என்றாா் சுஜாதா.

X
Dinamani
www.dinamani.com