முன்னாள் அமைச்சா் அலுவலகத்தில் முதியவா் சடலம்
தஞ்சாவூரிலுள்ள முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் அலுவலகத்தில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்தபோது, தஞ்சாவூா் சிவாஜி நகரில் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. பின்னா் அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இந்த அலுவலகம் மூடப்பட்டது.
நடமாட்டம் இல்லாமல் இருந்த இக்கட்டடத்திலிருந்து வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியது. தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் இறந்துகிடந்தவா் தஞ்சாவூா் அருகே வயலூா் ராமாபுரத்தைச் சோ்ந்த எம். குணசேகரன் (60) என்பதும், இவா் தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிலைய பாதுகாவலராக இருந்ததும், கடந்த 10 நாள்களாக அவரை குடும்பத்தினா் தேடி வந்த நிலையில், இந்தக் கட்டடத்தில் இரவு நேரத்தில் தங்கியிருந்த அவா் இறந்து போனதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
