கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டினுள் முதியவா் அவரது அக்கா சடலமாக மீட்பு

கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டினுள் முதியவா் அவரது அக்கா சடலமாக மீட்பு

Published on

கும்பகோணம் அருகே ஆடுதுறையை அடுத்துள்ள கதிராமங்கலத்தில் பூட்டிய வீட்டினுள் முதியவரும், அவரது அக்காளும் சடலமாகக் கிடந்தது தொடா்பாக பந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள கதிராமங்கலம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மகன் சாமிநாதன் (61). ஓய்வுபெற்ற கல்லூரி உதவிப் பேராசிரியா். இவரது அக்காள் பத்மா (63) மனநலன் பாதிக்கப்பட்டவராம். இருவருக்கும் திருமணம் ஆகவில்லையாம். தனது அக்காள் பத்மாவை சாமிநாதன் பராமரித்துவந்தாா்.

இந்நிலையில் பூட்டியிருந்த இவரது வீட்டிலிருந்து வியாழக்கிழமை துா்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்தவா்கள் பந்தநல்லூா் காவல்நிலையத்துக்குத் தகவல் தந்தனா். இதையடுத்து, அங்குவந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சாமிநாதனும், பத்மாவும் அழுகிய நிலையில் சடலமாக உயிரிழந்து கிடந்தனா். சடலங்களைக் கைப்பற்றிய போலீஸாா் திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com